[ad_1]





Chennai: தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அசின். கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா எனப் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். கடைசியாக இந்தியில் நடித்த `ஆல் இஸ் வெல்' படத்துக்குப் பிறகு, திருமண வாழ்க்கைக்காக சினிமாவிலிருந்து விலகிக்கொண்டார். 




சென்ற வருடம் ஜனவரியில் மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்து மும்பையில் வசித்துவந்தார். தற்போது இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அசின் மற்றும் ராகுல் ஷர்மாவுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து அசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "இன்று எங்களுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது என அறிவிப்பதில் அளவில்லாத மகிழ்ச்சி. உங்களுடைய வாழ்த்துகளுக்கும் அன்புக்கும் நன்றி. என்னுடைய பிறந்தநாளுக்கு (அக்டோபர் 26) இப்படி ஒரு அழகான பரிசு கிடைத்ததில் மகிழ்ச்சி" எனப் பதிவிட்டிருக்கிறார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");