[ad_1]
நெல்லை மாவட்டத்தின் கோயில்கள், கலை, பண்பாடுகுறித்து அறிந்துகொள்ளும் வகையில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை, கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம்செய்து பயன்படுத்திக்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.
நெல்லையில், கடந்த 12-ம் தேதி நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில், ‘டாக்கிங் டெம்பிள்ஸ் ஆஃப் திருநெல்வேலி’ என்ற புதிய ஆப் தொடங்கிவைக்கப்பட்டது. நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் முயற்சியால் உருவாக்கப்பட்ட செயலியை முதல்வர் தொடங்கிவைத்தார்.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுண்லோடு செய்துகொள்ளும் வசதிகொண்ட இந்தச் செயலிமூலமாக நெல்லையின் கலை, பண்பாட்டுச் சிறப்பை செல்போன் ஆப் மூலமாக உலகத்துக்கு எடுத்துச்செல்லும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. நெல்லையில், கலை மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பல கோயில்கள் உள்ளன. அவற்றைக் காண்பதற்கு உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகைதருகின்றனர். அவர்களுக்கு இந்தச் செயலி பயன் அளிக்கும்.
இந்தச் செயலி, சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக அமையும். முக்கியமான கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் அமைந்திருக்கும் இடம், அவற்றுக்குச் செல்லும் வழிகுறித்த வரைபடம் போன்ற தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன. முக்கியமான கோயில்களின் கலைச் சிறப்பு மிகுந்த சிற்பங்கள் பற்றியும் அவற்றை உருவாக்கிய மன்னர்கள்குறித்தும் தகவல்கள் உள்ளன. ஆன்மிகத் தகவல்கள், சிறிய காணொலிக் காட்சிகள் போன்றவையும் அதில் இடம் பெற்றிக்கின்றன.
தற்போது, மாவட்டத்தின் மிக முக்கியமான கோயில்கள் உள்ளிட்ட தகவல்கள் மட்டுமே இந்தச் செயலியில் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும், பல முக்கிய இடங்கள், வழிபாட்டுத் தலங்கள் பற்றிய விவரங்கள் தொகுக்கப்பட்டு விரைவில் இந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
நெல்லையின் கலை, பண்பாட்டை அறிய புதிய செயலி!
TAGS :
COMMENTS