[ad_1]

Chennai: சிவில் சர்வீசஸ் தேர்வில் ஐ.பி.எஸ் அதிகாரி சபீர் கரீம் காப்பியடித்து சிக்கிக் கொண்ட வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழகக் காவல்துறை டி.ஜி.பி ராஜேந்திரன் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.






மத்தியப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் ஐ.ஏ.எஸ் மெயின் தேர்வு அக்டோபர் மாதம் 30-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷபீர் கபீர் என்பவர் எழுதினார். சென்னை மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இவருக்கு தேர்வறை ஒதுக்கப்பட்டு இருந்தது. தேர்வின்போது கரீம், ப்ளூடூத் ஹெட்செட்டைப் பயன்படுத்தி ஹைடெக் முறையில் காப்பி அடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தேர்வறையில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது 420 (மோசடி) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சபீர் கரீமுக்கு உடந்தையாக இருந்த அவருடைய மனைவி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை எழும்பூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றி தமிழக காவல்துறை டி.ஜி.பி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");