[ad_1]





கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கத்தினர், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், குமரி மாவட்டத்தில் 48 மீனவ கிராமங்களிலும், 82 உள்நாட்டு மீனவக் கிராமங்களிலும் சுமார் நான்கு லட்சம் மீனவர்கள் வசித்துவருகின்றனர். கடந்த 1982-ம் ஆண்டு, நீதிபதி வேணுகோபால் கமிஷன் கன்னியாகுமரி மாவட்ட மீனவ மக்களின் வளர்ச்சிக்காக தனி சட்டமன்றத் தொகுதி ஏற்படுத்த வேண்டும் என பரிந்துரைசெய்தார். ஆனால், 35 ஆண்டுகள் ஆகியும் இதுவரை சட்டமன்ற தொகுதி வரைமுறை செய்யப்படவில்லை. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது ஆளும் பா.ஜ.க உட்பட அனைத்துக் கட்சிகளும் மீனவ மக்களைப் பட்டியல் இன மக்களாக அறிவிப்போம் என வாக்குறுதி அளித்தனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக மீனவ மக்களை பட்டியல் இன வகுப்பாக அறிவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளனர்.





அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், வளர்ச்சி என்ற பெயரில் அதிகாரமயமாக்கல் நோக்கத்துடன் குமரி மாவட்ட பாரம்பர்ய மீனவ மக்களின் குடியிருப்புகளையும் வாழ்வாதாரத்தையும் அழித்து, துறைமுக வல்லுநர்களின் ஆலோசனைகளுக்குப் புறம்பாக இனயம் பன்னாட்டுத் துறைமுகத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு பங்குத் தந்தைகளே ஆதரவாக செயல்பட்டாலும் அவர்களை எதிர்த்து இந்தத் துறைமுகத் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவோம்' எனக் கூறினர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");