[ad_1]
இந்தியக் கடலோரக் காவல்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்பட்ட பிரச்னை முடிவுக்கு வந்த நிலையில், நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேரை இலங்கைக் கடற்படையினர் இன்று காலை சிறைபிடித்துச் சென்றது, தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கள்கிழமை மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 2 மீனவர்கள் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தை இந்தியக் கடலோரக் காவல்படை மறுத்த நிலையில், நேற்று மண்டபம் கடலோரக் காவல்படை அதிகாரிகள், மீனவர்கள்மீது நடந்த தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், காயமடைந்த மீனவர்களை மருத்துவமனைக்கு சென்று பார்த்து ஆறுதல் கூறினர்.
கடலோரக் காவல்படை அதிகாரிகளின் இந்த நடவடிக்கையினால், இன்று மீனவர்கள் நடத்த இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்வதாக மீனவர் சங்க நிர்வாகிகள் சிலர் தன்னிச்சையாக அறிவித்தனர். மீனவர்களிடையே இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று காலை 10 மீனவர்களை இலங்கைக் கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளது.
நாகை மாவட்டத்திலிருந்து 885 என்ற எண் கொண்ட படகில் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் நெடுந்தீவுக்கு வட கிழக்கே வைத்து சிறைபிடித்துச் சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்குக் கொண்டுசென்று விசாரணை நடத்திவருகின்றனர்.
ஒரு பக்கம் இலங்கைக் கடற்படை, மறுபக்கம் இந்தியக் கடலோரக் காவல்படை என இரு முனைத் தாக்குதலில் சிக்கித் தவிக்கும் மீனவர்கள், தங்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காதா என ஏங்கிவரும் நிலையில், சில பிரதிநிதிகளால் ஒட்டுமொத்த மீனவர்களும் பாதிப்படைந்து வருவதால், மீள முடியாத அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
நாகை மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சிறைபிடிப்பு!
TAGS :
COMMENTS