[ad_1]
“மோடி ஆதரவு எங்களுக்கு உள்ளது” என்று பெரியகுளம் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சை வைத்து இரட்டை இலை வழக்கில் சிக்கலை ஏற்படுத்தவும், ராஜேந்திர பாலாஜியின் அமைச்சர் பதவிக்கு செக் வைக்கவும் தினகரன் தரப்பு களத்தில் இறங்கியுள்ளது.
அ.தி.மு.கவின் சின்னமான இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பதை நவம்பர் 10-ம் தேதிக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் அ.தி.மு.கவின் இரண்டு அணிகளிடமும் கட்சி மற்றும் சின்னம் குறித்து கடந்த 6-ம் தேதி முதல் கட்ட விசாரணையை மேற்கொண்டனர். இரண்டு அணிகளும் இணைந்துவிட்டதால், எங்களுக்கே கட்சியையும் சின்னத்தையும் வழங்க வேண்டும் என்று எடப்பாடி-பன்னீர் அணி தரப்பில் வலியுறுத்தபட்டது.
அதன் தொடர்ச்சியாகக் கடந்த 16-ம் தேதி அன்று இரண்டாம் கட்ட விசாரணை டெல்லியில் நடைபெற்றது. எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்கள் பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானம், பொதுக்குழுவில் பெறப்பட்ட பிரமாண பத்திரங்கள் போன்ற ஆவணங்களை வைத்து தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். தினகரன் தரப்பிலும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு தேர்தல் ஆணையம் 23-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தது. இந்நிலையில் 'பொதுக்குழு தீர்மானம், உறுப்பினர்களின் பிரமாண பத்திரம்' என வலுவான ஆதாரங்களைத் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி தரப்பு தாக்கல் செய்திருப்பதால் சின்னமும், கட்சியும் எடப்பாடி-பன்னீர் அணிக்கே கிடைக்கும் என்று பரவலாகக் கருத்து நிலவியது.
தினகரன் தரப்போ, கட்சியும் சின்னமும் அவர்கள் கைக்குச் சென்றுவிட்டால் எதிர்காலத்தில் தங்களது அரசியலே கேள்விக் குறியாகிவிடும் என்பதால் அதற்கு செக் வைக்கும் திட்டத்தில் இறங்கியது. அதனால் இறுதி விசாரணை நடைபெறும் 23-ம் தேதிக்கு முன்தினமான 22-ம் தேதி இரவு (நேற்று), சசிகலா பெயரில் தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தனர். அந்த மனுவில் “ எடப்பாடி தரப்பு இப்போது தாக்கல் செய்த பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாண பத்திரத்தில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. செப்டம்பர் மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் கலந்து கொண்ட உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்று இந்தப் பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளார்கள். ஆனால், பொதுக்குழு உறுப்பினர்களிடம் எதற்காக இந்தப் பிரமாண பத்திரம் என்று சொல்லாமலே கையெழுத்து பெறப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து போட்ட உறுப்பினர்களிடம் நாங்கள் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்” என்று மனு அளித்தனர்.
இந்த மனுவினால் இரட்டைஇலையை வழங்க முடிவுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை நடைபெற உள்ள விசாரணையில் தேர்தல் ஆணையம் சசிகலா தாக்கல் செய்த மனு குறித்து முடிவெடுக்க வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் தினகரன் தரப்பு அடுத்த நெருக்கடியைத் தேர்தல் ஆணையத்திற்குக் கொடுத்துள்ளது .அதாவது, சில தினங்களுக்கு முன் பெரியகுளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி “அதிமுகவுக்கு எந்தப் பிரச்னை வந்தாலும் அதை பிரதமர் மோடி பார்த்துக்கொள்வார். மோடி இருக்கும் வரை அதிமுக கட்சியும் சின்னமும் நம்மிடம்தான் இருக்கும். ஆகையால் எந்தப் பிரச்னை வந்தாலும் மேலே உள்ளவர் நம்மைப் பார்த்துக்கொள்வார். நாம் கவலையே படவேண்டாம்” என்று ஓபனாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தப் பேச்சை வைத்தே எடப்பாடி அணிக்குச் சிக்கலை ஏற்படுத்தும் வேலையில் இப்போது தினகரன் தரப்பு இறங்கிவிட்டது.
தேர்தல் ஆணையத்தில் இன்று காலை அவசரமாகத் தினகரன் பெயரில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பாகக் கருதப்படுகிறது. ஆனால், அரசுக்குக் கட்டுப்பட்ட அமைச்சர் ஒருவர், வெளிப்படையாகவே பிரதமர் மோடியின் ஆதரவு இருப்பதால் சின்னம் எங்களுக்கு வந்துவிடும் என்று சொல்லியிருப்பது சட்டத்துக்கு முரணானது. தேர்தல் ஆணையத்தின் நடுநிலைக்கும் எதிரானது. தேர்தல் ஆணையத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போது அமைச்சர் இப்படிப் பேசியிருப்பது எங்களுக்குத் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைமீது ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் பேச்சு குறித்து நீதிமன்றத்தில் முறையிடும் நிலையில் நாங்கள் இருக்கிறோம்” என்று அதில் குறிப்பிட்டுள்ளனர். மோடியின் ஆதரவோடு தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா என்ற ரீதியில் தேர்தல் ஆணையத்திடம் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்கள். அதேபோல் நீதிமன்றம்மூலம் ராஜேந்திர பாலாஜிக்குச் சிக்கலை ஏற்படுத்த தினகரன் தரப்பு திட்டமிட்டுள்ளது.
தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூரப்பாண்டியன் நம்மிடம், “இரட்டை இலை வழக்குத் தேர்தல் ஆணையத்தில் இருக்கும்போது அமைச்சரே, 'பிரதமர் ஆதரவோடு சின்னம் எங்களுக்குக் கிடைக்கும்' என்று சொல்லியிருப்பது சட்டத்துக்கு விரோதமானது. அதைச் சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம். இந்த மனுவை விசாரித்த பிறகே இரட்டை இலை வழக்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்று முறையிட உள்ளோம்” என்றார்.
இந்த இரண்டு மனுக்களுமே எடப்பாடி தரப்புக்குச் சின்னம் சென்றுவிடக் கூடாது என்ற நோக்கில், தினகரன் தரப்பினால் போடப்பட்ட வழக்குகள் என்று சொல்லப்படுகின்றன. இதனால் இரட்டை இலை வழக்கு குறித்து உடனடியாக எந்த முடிவையும் தேர்தல் ஆணையம் எடுக்க முடியாமல் போகலாம் என்பதே தினகரன் தரப்பின் எதிர்பார்ப்பு. இதற்கு முன்பே தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று தினகரன் தரப்பு கோரிக்கைவைத்த நிலையில் அது கைகூடாமல் போனதால், இப்படிச் சிக்கலான மனுக்கள் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு நெருக்கடி கொடுக்கும் வேலையில் தினகரன் அணியினர் இறங்கியுள்ளனர் என்கிறார்கள். அதேநேரம், ராஜேந்திர பாலாஜி அ.தி.மு.க.வட்டாரங்களில் சசிகலாவின் ஆதரவாளராக அறியப்பட்டவர். அவருக்கு எதிராகவே இப்போது தினகரன் தரப்பு இறங்கியிருப்பது ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
அமைச்சர் பதவிக்கு சிக்கல், இரட்டை இலைக்கு செக்..! - தினகரனின் 'நியூ' வியூகம்
TAGS :
COMMENTS