[ad_1]
தேர்தல் காலங்களில் தேர்தல் தொடர்பாக ஜோதிடர்கள் தெரிவிக்கும் எந்த முடிவுகளையும் வெளியிடக்கூடாது என தேர்தல் கமிஷன் தடைவிதித்திருக்கிறது.
இன்று இமாச்சல பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்தது. அதுபோல் குஜராத் மாநிலத்தின் சட்டசபைத் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இரண்டு மாநிலங்களிலும் நடைபெறும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 18-ம் தேதி நடைபெறும். அதுவரை எந்தக் கருத்து கணிப்பையும் ஊடகங்கள் வெளியிடக் கூடாது என தேர்தல் கமிஷன் தடைவிதித்திருக்கிறது. கடந்த மார்ச் மாதம் உத்திரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தலின் போதும் இதுபோல் தேர்தல் கமிஷன் தடைவிதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜோதிடர்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் ஊடகங்கள் வெளியிடக்கூடாது என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இன்று தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”தேர்தல் முடிவு தொடர்பான எந்த ஜோதிடர்களின் கருத்துக்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது. தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் என அனைத்துவகையான செய்தி ஊடகங்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்தும். இன்றிலிருந்து டிசம்பர் 14-ம் தேதிவரை இந்த தடை நீடிக்கும். சுதந்திரமாக தேர்தல் நடக்க ஊடகங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
ஜோதிடர்களின் கருத்துக் கணிப்புகளுக்குத் தடை! தேர்தல் கமிஷன் அதிரடி!
TAGS :
COMMENTS