[ad_1]
Chennai: இரட்டை இலை சின்னத்தைப் பெற, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டிசம்பர் 5-ம் தேதிக்குள் துணைக் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்ய டெல்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது, அ.தி.மு.க-வில் பிளவு நிலவியதால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. தேர்தலில் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் போட்டியிட்ட டி.டி.வி. தினகரன், இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் கைதுசெய்தது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், டி.டி.வி.தினகரன் கைதுசெய்யப்பட்டார்.டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட டி.டி.வி.தினகரன், பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். சுகேஷ் சந்திரசேகர், நீதிமன்றக்காவலில் உள்ளார்.இது சம்பந்தமான வழக்கு, டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இன்று, அந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது, வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீதான துணைக் குற்றப்பத்திரிக்கையை டிசம்பர் 5-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க, டெல்லி குற்றப்பிரிவு போலீஸாருக்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. மேலும், சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்றக் காவலை நவம்பர் 23-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த வழக்கில், நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் டி.டி.வி.தினகரன் பெயர் இடம்பெறவில்லை. துணைக் குற்றப்பத்திரிக்கையில் தினகரன் பெயர் இடம்பெறும் என்று அப்போது போலீஸார் தெரிவித்திருந்தனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
இரட்டை இலை லஞ்சம்! - துணைக் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்ய உத்தரவு
TAGS :
COMMENTS