[ad_1]
மூன்றாம் நாளாக வருமான வரிச் சோதனை நடந்துவரும் நிலையில், கர்நாடகா அ.தி.மு.க அம்மா அணி செயலாளர் புகழேந்தி, வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும், மூன்றாம் நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் என கிட்டத்தட்ட 180 இடங்களுக்கும் மேல் நேற்று சோதனை நடந்தது. திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள், அங்கு பணியாற்றும் மேலாளர், ஊழியர்களின் வீடுகள் எனத் தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என மொத்தம் 105 இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இது தவிர ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி என 82 இடங்களில் நடைபெற்றது. மொத்தம் 187 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. மூன்றாவது நாளாக இன்று சென்னை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் சோதனை நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், கர்நாடகா அ.தி.மு.க அம்மா அணிச் செயலாளரும் தினகரன் ஆதரவாளருமான புகழேந்தி, வரும் திங்கட்கிழமை சென்னையில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
வருமான வரிச் சோதனை: புகழேந்தி ஆஜராக உத்தரவு
TAGS :
COMMENTS