[ad_1]





ஒரு காலத்தில் சேவையாகப் பார்க்கப்பட்ட மருத்துவத்துறை இப்போது பணம் கொழிக்கும் துறையாக மாறிவிட்டது. ஆங்காங்கே மக்களிடம் 20 ரூபாய் பீஸ் பெற்றுக்கொண்டு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதேபோல ஒடிஷாவில் இளம் மருத்துவரின் செய்கை வியக்க வைத்துள்ளது. 




ஒடிஷாவில் மல்கான்கிரி மாவட்டத்தில் செரிகட்டா கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்தார். கடந்த வெள்ளிக்கிழமையை அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, பப்லூர் மருத்துவமைனயில் பணியில் இருந்த டாக்டர். ஓம்கார் கோதாவுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. கிராமத்துக்குச் செல்வதற்கு சாலை வசதியும் கிடையாது. வாகன வசதியும் கிடையாது. டாக்டர் ஓம்கார் ஒரு கணம்கூட யோசிக்கவில்லை. தன் உதவியாளருடன் அந்தக் கிராமத்துக்கு விரைந்தார். அதற்குள், அந்தப் பெண்ணுக்கு அதிக உதிரப்போக்கு ஏற்பட்டுவிட்டது. அவரை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தால்தான் காப்பற்ற முடியும் என்கிற நிலை. 



துரதிர்ஷ்டவசமாக அந்தப் பெண்ணுக்கு உதவ கிராம மக்கள் முன்வரவில்லை. டாக்டர் ஓம் கார் கவலைப்படவில்லை. கட்டில் ஒன்றைக் கம்பில் கட்டி அதில் அந்தப் பெண்ணைப் படுக்க வைத்து டாக்டரும் அந்தப் பெண்ணின் கணவரும் மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்ல முடிவெடுத்தனர். இடையில் ஆறுகள் ஓடைகளைக்கூட கடக்க வேண்டியது இருந்தது. அப்படி  8 கிலோ மீட்டர் தொலைவுக்கு அந்தப் பெண்ணை இருவரும் சேர்ந்து தூக்கி வந்தனர்.


பப்லூர் மருத்துவமனையில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். தம்பதியர் டாக்டர் ஓம் காருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். மருத்துவர்களைக் கடவுளுக்கு நிகர் என்பார்கள். அது உண்மைதான்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்