[ad_1]





Chennai: 

"2ஜி முறைகேடு பணத்திலிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் வந்தது உண்மையா இல்லையா" என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.


சசிகலா குடும்பத்தினரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் அண்மையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மெகா சோதனை நடத்தினர். இந்தச் சோதனைகுறித்து கருத்து தெரிவித்த தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்களின் வீடுகளிலும் சோதனை நடத்த வேண்டும் என்றும் இலவசமாகக் கல்வி வழங்குகிறேன் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்திவரும் சைதை துரைசாமி வீட்டிலும் சோதனை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

மு.க.ஸ்டாலினின் இந்தக் கருத்துக்கு சைதை துரைசாமி ஆவேசமாகப் பதிலளித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்மீது தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறு கருத்துகளைப் பரப்பி வருகிறார். அறக்கட்டளை மூலம் பல உயரதிகாரிகளை உருவாக்கி வருகிறேன். என்னுடைய சேவையைக் களங்கப்படுத்தும் விதத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்மீது வழக்கு தாெடருவேன். கல்வியை இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அறக்கட்டளை நடத்திவருகிறேன். கல்வியைப் பணமாக்க நினைத்திருந்தால் ஆண்டுக்கு ரூ.120 கோடி பெற்றிருக்க முடியும். மு.க.ஸ்டாலின், உதயநிதி, தொழிலதிபர் சேகர் ரெட்டி இடையே பண வரவு செலவு உண்டா இல்லையா?

2ஜி முறைகேடு பணத்திலிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் வந்தது உண்மையா இல்லையா. ஹம்மர் கார் வாங்கிய விவகாரத்தில் ஸ்டாலின் மகன் வீட்டில் ரெய்டு நடந்தது என்னவாயிற்று. மற்ற ரெய்டுகளைப் பற்றி கேட்கும் மனுநீதி சோழனின் வாரிசு மு.க.ஸ்டாலின் இதையும் கேட்க வேண்டும்.  வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக நிரூபித்தால் பொது வாழ்க்கையை விட்டே செல்கிறேன்" என்று கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");