[ad_1]
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடிக்கச் சென்று திரும்பியபோது கடலில் விழுந்த மீனவரை மீட்டுத் தரக்கோரி ராமேஸ்வரம் மீன்பிடி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமேஸ்வரம் அருகே உள்ள குடியிருப்புக் கிராமத்தைச் சேர்ந்தவர் மீனவர் செந்தில்குமார் (37). இவர் கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டினம் கிராமத்தில் மீன்பிடித் தொழிலாளியாக இருந்துவருகிறார். கடந்த 15-ம் தேதி செந்தில்குமார் உள்ளிட்ட 13 மீனவர்கள் விசைப்படகு ஒன்றில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு கரை திரும்பினர்.
அப்போது எதிர்பாராதவிதமாக செந்தில்குமார் கடலில் தவறி விழுந்துள்ளார். உடனிருந்த மீனவர்கள் கடலில் விழுந்த மீனவர் செந்தில்குமாரை தேடியும் மீட்க முடியவில்லை. 4 நாள்கள் ஆனபின்பும் செந்தில்குமார் என்ன ஆனார் எனத் தெரியவில்லை. இதையடுத்து, கடலில் விழுந்து காணாமல் போன மீனவர் செந்தில்குமாரை மீட்டுத் தரக்கோரி ராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சி.ஐ.டி.யு) மற்றும் குடியிருப்புக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்ட முடிவில் ராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குநரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
கடலில் விழுந்த மீனவரை மீட்டுத் தரக்கோரி ஆர்ப்பாட்டம்..!
TAGS :
COMMENTS