[ad_1]





Chennai: நடிகர் கமல்ஹாசனின் 63வது பிறந்தநாளான இன்று புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய செயலியை அறிமுகப்படுத்தி வைத்து பேசிய கமல்  ’இது வெறும் ஒரு ஆப் மட்டும் அல்ல. இது பொது அரங்கம்’ என்று குறிப்பிட்டுள்ளார். 


 


விழாவுக்கு தாமதமாக வந்ததற்கு செய்தியாளர்களிடன் மன்னிப்புக் கோரி பேசத் தொடங்கிய கமல் அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளை குறித்து பேசினார். ’தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்து தரப்பு மக்களையும் பற்றி தெரிந்து கொள்ள முடிவு செய்திருக்கிறேன். தமிழகத்தை இயங்க வேண்டிய சக்கரங்கள் பழுந்தடைந்துள்ளன. நான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது’ என்றார்.

மக்கள் பிரச்னைகளைப் பேச ’MAIAMWHISTLE’ என்ற பெயரில் புதிய #TAG அறிமுகம் செய்த கமல், #theditheerpomvaa, #virtuouscycles, #maiamwhistle என்ற பெயரில் ஹேஷ்டேக்குகளையும் அறிமுகம் செய்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்