[ad_1]

காசோலைகளைத் திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் இன்று விளக்கமளித்துள்ளது.




 


டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை அதிகப்படுத்தும் வகையில், காசோலைகளை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாயின. காசோலைகளுக்கு மத்திய அரசு தடை விதிக்கக் கூடும் என்றும், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமான டிஜிட்டர் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அகில இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் மூத்த அதிகாரி பிரவீன் கந்தேல்வால் நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார். இது பணமதிப்பிழப்பு போன்ற இன்னொரு நடவடிக்கையாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. இது பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளியாயின. நாடு முழுவதும் 95 சதவீத வர்த்தக நடவடிக்கைகள் காசோலைகள் மற்றும் ரூபாய் நோட்டுகள் வாயிலாகவே நடக்கிறது. ஆகவே, காசோலைகளை ரத்து செய்தால் அது வணிகர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில், காசோலைகளை ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிதி அமைச்சம், “டிஜிட்டல் பணப்பரிவர்ததனையை ஊக்குவிக்க காசோலைகளை ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை. ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது” என்று கூறியுள்ளது.

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");