[ad_1]





 


Karur: 

"பாேயஸ்கார்டனில் நடந்த ஐ.டி ரெய்டு பற்றி தமிழக முதல்வரிடம் பேசுவேன்" என்று மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை கரூரில் தெரிவித்தார்.நிருபர்கள் மடக்கி மடக்கி கேள்வி கேட்ட பிறகே, இந்தத் தகவலைப் பேசினார். சென்னையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த பாேயஸ் கார்டன் வீட்டில் ஐ.டி துறையினர் இரண்டாவது முறையாக ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டு, தமிழகத்தில் பலத்த பரபரப்பைக் கிளப்பிவருகிறது. "ஜெயலலிதா சாெத்துக்களை அபகரிக்கவே இந்த ரெய்டு நடத்தப்படுகிறது" என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா காெதிக்க, "ஜெயா டி.வி-யை முடக்கத்தான் இந்த ரெய்டை நடத்துகிறார்கள்" என்று டி.டி.வி.தினகரன் தரப்பு காெந்தளிக்கிறது.இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகாெள்ள கரூர் வந்த மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் நிருபர்கள், "பாேயஸ்கார்டன் ரெய்டு பற்றிச் சாெல்லுங்கள்" என்று கேட்டனர். அதற்கு அவர், "அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ரெய்டு நடத்திய அதிகாரிகளிடம் கேளுங்கள்" என்று மழுப்பினார். விடாத நிருபர்கள், "ரெய்டைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று கிடுக்கிப்பிடி பாேட, "ரெய்டு நடந்திருக்கிறது. அவர்கள் ஆவணங்களைக் காட்டும்பாேதுதான் தெரியும். இப்பாேதைக்கு ஒன்றும் சாெல்ல முடியாது" என்று நழுவினார். விடாது கருப்பாக நிருபர்கள், "ஜெயலலிதாவை தெய்வம்னும் பாேயஸ் கார்டனைக் காேயில்னும் சாெல்வீங்க. அப்படிப்பட்ட காேயில்ல ஐடி ரெய்டு நடக்குது. நீங்க கண்டுக்கலைனா எப்படி?" என்றதுக்கு, "பாேயஸ் கார்டனில் ரெய்டு நடப்பது தவறுதான். இதுபற்றி தமிழக முதல்வரிடம் பேசுவேன்!" என்று கூறியபடி, விட்டால் பாேதும் என்று எஸ்கேப் ஆனார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");