[ad_1]
திருப்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட த.மு.மு.க மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லாஹ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, 'தமிழக மீனவர்களை இந்தியக் கடலோரக் காவல்படையினர் தாக்கிய சம்பவம் தொடர்பான மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கது. பா.ஜ.க அரசின் கொத்தடிமைகளாக மாறிவிட்ட அ.தி.மு.க அமைச்சர்களும் நிர்மலா சீதாராமனின் கருத்து சரி என்று தலையாட்டுவதும் கண்டிக்கத்தக்கது.
ஏற்கெனவே, தமிழகத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனைகளில் எல்லாம் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கின்ற சூழலில், தற்போது நடைபெறும் வருமான வரிச் சோதனையும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே நடைபெற்றிருக்கிறது. தமிழகத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசியல் சட்டமைப்புக்கு எதிராகவே செயல்படுகிறார். ஆளுநர் மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பத, ராஜ்பவனை சைவ பவனாக மாற்றுவதற்கான முயற்சியாகத் தெரிகிறது.
எனவே, இந்த உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அதேபோன்று, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சத்துணவில் முட்டை வழங்குவதில் தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல் வருகிறது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து முட்டை தட்டுப்பாடு நிகழாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்" என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ராஜ்பவனை சைவ பவனாக மாற்றுகிறார் ஆளுநர் - ஜவாஹிருல்லாஹ் குற்றச்சாட்டு
TAGS :
COMMENTS