[ad_1]
நீரிழிவு நோய் குறித்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நெல்லையில் நடைபெற்றது. ஒரு வாரம் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மனிதச் சங்கிலி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
உலகில் அதிகமானோர் பாதிப்புக்கு உள்ளாகும் நோய்களில் முதன்மையானது, நீரிழிவு. வயது வித்தியாசம் இல்லாமல், பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரையிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அடுத்த சில வருடங்களில் உலக நீரிழிவு நோயாளிகளில் அதிகமானோர் இந்தியாவில் இருப்பார்கள் என்கிற புள்ளிவிவரம் இந்திய மருத்துவ வட்டாரத்தை அச்சம் அடைய வைத்துள்ளது.
நீரிழிவு நோயாளிகள், போதிய கவனம் இல்லாமல் இருந்தால் முதலில் பாதிப்புக்கு உள்ளாவது அவர்களின் கண். அதனால், இந்த நோய் குறித்த விழிப்பு உணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் நெல்லையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக ஒரு வாரத்துக்கு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, நீரிழிவு விழிப்பு உணர்வு மனிதச் சங்கிலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வ அமைப்பினர் இதில் பங்கேற்றனர்.
தலைமை கண் மருத்துவர் ராமகிருஷ்ணன், துணை கண் மருத்துவர் மீனாட்சி, டாக்டர் வேணுகோபால் ரெட்டி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். பொதுமக்களிடம், நீரிழிவின் பாதிப்புகள் குறித்து விளக்கும் நோட்டீஸ்களும் விநியோகிக்கப்பட்டன.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள், அதனால் கண்ணுக்கு ஏற்படும் பிரச்னைகள் பற்றியும் அதனைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், டாக்டர்.கார்த்திக் ஸ்ரீனிவாசன் சிறப்புரை ஆற்றினார்.
மருத்துவமனை வளாகத்தில் நீரிழிவு நோய் குறித்த விழிப்பு உணர்வு கண்காட்சி நடைபெற்றது. அதனை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். அத்துடன், இலவச ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. நீரிழிவு நோய் குறித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அடுத்த ஒரு வாரத்துக்கு இந்த நிகழ்ச்சிகள் தொடரும் வகையில் மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
நீரிழிவு நோய் குறித்த விழிப்பு உணர்வு மனிதச் சங்கிலி!
TAGS :
COMMENTS