[ad_1]
சசிகலா உறவினர்கள், ஆதரவாளர்களுக்குச் சொந்தமான 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலையிலிருந்து ஐ.டி ரெய்டு நடந்துவரும் நிலையில், தினகரன் தரப்பு வழக்கறிஞர் காசிநாதபாரதி, `வருமான வரித்துறை சுதந்திர அமைப்பு என நினைத்தோம். ஆனால், அது மோடியின் இன்னொரு அரசியல் பிரிவு என்பது தெளிவாகியுள்ளது' என்று கூறியுள்ளார்.
அவர் மேலும், `வருமான வரித்துறை சோதனை இப்படி நடக்க வேண்டிய அவசியமில்லை. வருமான வரி ஏய்ப்பிருந்தால், முறையாக நோட்டீஸ் அனுப்பியிருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யவில்லை இந்த அரசு. வருமான வரித்துறை என்பது சுந்திரமாக செயல்படும் அமைப்பு என்று நினைதிருந்தோம். ஆனால், இது மோடியின் இன்னொரு அரசியல் பிரிவுதான் என்பது இந்த சோதனைகளிலிருந்து தெளிவாகிறது. சேகர் ரெட்டி வீட்டிலும் ஜனார்த்தனன் வீட்டிலும் ஐ.டி ரெய்டு நடத்தப்படாத நிலையில், இங்கு மட்டும் ரெய்டு நடத்துவதற்கான அவசியம் என்ன இருக்கிறது. ராமமோகன ராவ் வீட்டில் நடந்த சோதனையில் வருமான வரித்துறை என்ன கண்டுபிடித்தது. இதைப் போன்ற சோதனைககுக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். எதையும் சட்டபூர்வமாக எதிர்கொள்வோம். ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் பத்திரிகை என்பது அ.தி.மு.க சார்புடைய தனியார் நிறுவனங்கள். சோதனைகளை ஏவிவிட்டு அவற்றை கைப்பற்ற முடியாது' என்று கூறியுள்ளார்
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
`மோடியின் அரசியல் பிரிவுதான் வருமான வரித்துறை' - தினகரன் தரப்பு தாக்கு!
TAGS :
COMMENTS