[ad_1]
குஜராத் மற்றும் இமாசலப் பிரதேசத்தில் ராகுல்காந்தி சிறப்பாக தேர்தல் பணியாற்றிவருகிறார் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் சென்றுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கொச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அதன்பின்னர் எர்ணாகுளத்தில் தூய தெரசா கல்லூரியில் நடைபெற்ற பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஜி.எஸ்.டி மற்றும் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் அரசுமீது மக்களுக்கு இருக்கும் கோபம் தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை உறுதியாகக் கூற முடியாது. என்னால் நம்பிக்கை மட்டுமே வைக்க முடியும். குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச தேர்தலுக்காக துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக உழைத்துவருகிறார். அவரது உழைப்புக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன். ஆனால், தேர்தல் முடிவுகள் தீர்மானிக்க முடியாதவை' என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ராகுல் காந்தி தேர்தலுக்காக சிறப்பாக பணியாற்றிவருகிறார்..! மன்மோகன் சிங் புகழாரம்
TAGS :
COMMENTS