[ad_1]
பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு ஆடையைப் பரிசளித்தார் நடிகை அனுஷ்கா ஷர்மா. சமீபத்தில், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா ‘நஷ்’ என்ற ஃபேஷன் பிராண்ட் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். அவர் தற்போது திரைப்படங்கள் நடிப்பதுடன், ஃபேஷன் உலகிலும் கவனம் செலுத்திவருகிறார். கடந்த மாதம், மும்பையில் தொடங்கிய இந்த ‘நஷ் ‘ ஃபேஷன் பிராண்ட் பற்றி தனது சமூகவலைதளத்தில் தொடர்ந்து விளம்பரம் செய்துவருகிறார். அந்த வகையில், பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்குப் புதிய ஆடைகளைப் பரிசளித்திருக்கிறார். இதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட சாய்னா, “உங்களின் புதிய தொடக்கத்துக்கு வாழ்த்துகள். நான் மிக விரைவில் இந்த ஆடைகளை அணியவிருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு அனுஷ்கா ஷர்மா நன்றி தெரிவித்திருக்கிறார். சமீபத்தில், தனது ஃபேஷன் பிராண்ட் பற்றி பேசிய அனுஷ்கா, இது தனது நீண்டகாலக் கனவு என்று குறிப்பிட்டார்.மேலும், பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூர், நடிகை சன்னி லியோன், சோனாக்ஷி சின்ஹா எனத் தனது நண்பர்களுக்கும் ஆடைகளைப் பரிசளித்து மகிழ்த்திருக்கிறார் அனுஷ்கா ஷர்மா!
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
சாய்னா நேவாலுக்கு ஆடையைப் பரிசளித்த அனுஷ்கா ஷர்மா!
TAGS :
COMMENTS