[ad_1]





'என் மனைவிக்கு வாக்களிக்கவில்லையென்றால், இஸ்லாமியர்கள் கடும் பிரச்னைகளை எதிர்கொள்ளவேண்டி வரும்' என்று உத்தரப்பிரதேச பா.ஜ.க நிர்வாகி மிரட்டி வாக்கு சேகரித்துள்ளார். 





உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில், பா.ஜ.க சார்பில் சாஷி ஶ்ரீவஷ்டவா என்பவர் போட்டியிடுகிறார். அவரது கணவரும் தற்போது பா.ஜ.க கவுன்சிலராக இருப்பவருமான ரஞ்சீத் குமார் ஶ்ரீவஷ்டவா, கடந்த வாரம் அவரது மனைவிக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், 'தற்போது நடைபெறுவது சமாஜ்வாதி ஆட்சி அல்ல. எந்தத் தலைவர்களும் உங்களுக்கு உதவி செய்யமுடியாது.

சாலை வசதி, தண்ணீர் வழங்குதல் உள்ளிட்டவை உள்ளாட்சி அமைப்புகளின் கீழ்தான் உள்ளது. நீங்கள் (இஸ்லாமியர்கள்) எங்களுக்கு வாக்களிக்கவில்லையென்றால், இருதரப்புக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டுவிடும். அதன்பின்னர், நீங்கள் இதற்குமுன்னர் சந்திக்காத அளவு துன்பங்களைச் சந்திக்க நேரும். எங்களிடமிருந்து யாரும் உங்களைக் காப்பாற்ற முடியாது. அதனால்தான், நான் இஸ்லாமியர்களை எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறுகிறேன்.

நான் ஒன்றும் உங்களிடம் பிச்சை எடுக்கவில்லை. நீங்கள் எங்களுக்கு வாக்களித்தால், நிம்மதியாக வாழலாம். இல்லையென்றால், நீங்கள் ஏராளமான பிரச்னைகளை எதிர்கொள்ளவேண்டிவரும்' என்று பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ, இணையத்தில் வைரலாகிவருகிறது. மிரட்டும் தொனியில் சர்ச்சைக்குரிய வகையில் பா.ஜ.க நிர்வாகி ரஞ்சித் குமார் பேசும்போது, அந்த மேடையில் உத்தரப்பிரதேச அமைச்சர்கள் தாரா சிங் சௌஹான் மற்றும் ராம்பதி சாஸ்திரி ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");