[ad_1]
”கோவையில் ஆளுநர் நடத்தியது ஆய்வு இல்லை, அது கலந்துரையாடல்” என ஹெச்.ராஜா புதிய விளக்கம் அளித்துள்ளார்.
கோவைக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாகச் சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அரசு வளர்ச்சிப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடனும் அமைச்சர்களுடனும் ஆய்வுசெய்தார். இந்த ஆய்வு, தமிழகத்தில் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியது. குறிப்பாக, ஆளுநரின் செயல்பாடு மாநில சுயாட்சி உரிமையைப் பறிக்கும் விதமாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் கொந்தளித்துவருகின்றன. மேலும், இது தமிழகத்தின் மாநில ஆட்சிக்கு முடிவுகட்டும் ஒரு நிகழ்வு என பல முக்கிய எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எதிர்ப்புக்குரல்கொடுத்தனர்.
ஆனால், ஆளுநரின் செயல்பாட்டில் தவறில்லை. இது ஆரோக்கியமான ஒன்றுதான் என அ.தி.மு.க அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க பிரமுகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து ஹெச்.ராஜா கூறுகையில், “கோவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார் அது ஆய்வு இல்லை. சமீபத்தில் போயஸ் தோட்ட இல்லத்தில் சோதனை செய்ய யாரிடம் அனுமதி பெற வேண்டும்; போயஸ் தோட்டத்தில் நடந்த சோதனை, வருமான வரிச் சோதனையின் நீட்சியே. உப்பைத்தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். வருமானவரித்துறை சோதனைக்காக மத்திய அரசை குறைகூறுவதில் எந்த நியாயமும் இல்லை. பையனூர் பங்களா உள்ளிட்ட சொத்துகள் மிரட்டி வாங்கப்பட்டவையே; ஏதோ உலகம் அழியப்போகின்ற மாதிரி டிடிவி தினகரன் பேசிக் கொண்டு இருக்கிறார்” எனக் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
”அது ஆய்வு இல்லை, கலந்துரையாடல்”: ஹெச்.ராஜா புது விளக்கம்
TAGS :
COMMENTS