[ad_1]
சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்கள் என 187 இடங்களில் அதிரடி சோதனை செய்து முடித்துள்ளது வருமானவரித் துறை. இது, தமிழக அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியிருக்கும் இந்தச் சூழலில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவையில் ஆய்வு நடத்தி அடுத்த அதிர்வை ஏற்படுத்தினார். இப்படியான நிலையில், அரசியல் களம் தகித்துக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழல் குறித்து அ.தி.மு.க அம்மா அணியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
"சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்களில் வருமானவரித் துறை சோதனை நடத்தியிருப்பது குறித்து?"
''வரலாறு காணாத வகையில் இந்தச் சோதனையை நடத்தி முடித்திருக்கிறது வருமானவரித் துறை. ஒரு குடும்பத்தின்மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் இது. விளிம்புநிலை மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தைச் சின்னாப்பின்னம் ஆக்குவதற்கு டெல்லியில் உள்ள எஜமானர்கள் எடுத்துள்ள கடைசி முயற்சி. அவர்களுடைய அம்பார துளியில் உள்ள கடைசி அம்பை எய்திருக்கிறார்கள்.
இப்படி அவமானப்படுத்துவதனாலும், அசிங்கப்படுத்துவதனாலும் நாட்டு மக்கள் மத்தியில் அ.தி.மு.க-வின்மீது இருக்கக்கூடிய மதிப்பு மரியாதை காணாமல் போய்விடும் எனக் கணக்கிடுகிறார்கள். இதனை ஏற்கெனவே செய்து பார்த்திருக்கிறார்கள். மாநில சுயாட்சி என்கிற தீபத்தை அணையாமல் காப்பதற்குத் துணிந்து போராடி வாகை சூடிய அ.தி.மு.க-வை அதே உயிர்பிடிப்போடு முன்னெடுத்துச் செல்வதற்கு பயணத்தைத் தொடங்கியிருக்கிற தினகரன்மீது தொடுத்த தாக்குதலாக இதனைக் தொண்டர்கள் கருதுகின்றனர். அவமானங்களைச் சகித்துக்கொள்கிறோம். இப்படிப்பட்ட நடவடிக்கைகளை அவர்கள் தொடர்ந்து மேற்கொள்வதன்மூலம் களமாடுகிற தொண்டன் சஞ்சலித்துவிடுவான் என உளவியல்ரீதியாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், சஞ்சலமும் இல்லை... அஞ்சுவதும் இல்லை என்ற தெளிவோடு பயணிக்கிறோம்.
ஏற்கெனவே அதிகாரத்தில் இருந்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தற்போது அதிகாரத்தில் உட்கார வைக்கப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பச்சைத்துரோகத்தைச் செய்து, டெல்லி எஜமானர்களுக்குக் காட்டிக்கொடுத்த நிலையிலும், டி.டி.வி.தினகரன் தலைமையில் அ.தி.மு.க., பட்டத்து யானையைப்போலப் பயணித்து வருகிறது. தொடர்ந்து அடித்துக்கொண்டே இரு.. புது ரத்தம் வழிந்துகொண்டே இருக்கட்டும் என்கிற அவர்களுடைய எண்ணம் எங்களிடத்தில் எடுபடாது. கட்சியைக் காப்பற்றுகிற முயற்சியில் டி.டி.வி.தினகரன் வாகை சூடுவார் என்பதை வருகிற நாளில் நிரூபிப்போம்.. "
"வருமானவரித் துறை நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள் பணம் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறதே... அப்படியிருக்கும் அந்தச் சோதனையே தவறானது என விமர்சிக்க முடியுமா ?''
''யார் சொத்து சேர்த்தார்களோ... அவர்கள்தான் குற்றவாளி. அவர்களை விசாரிப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.மறைந்துபோன மகாதேவன் வீடு மற்றும் மருத்துவச் சிகிச்சையில் உள்ள தமிழரசி போன்றோரின் வீடுகளில் ரெய்டு நடத்தியிருப்பது மிகவும் மோசமான நடவடிக்கை''.
"வருமானவரித் துறை சோதனை என்று வந்துவிட்டால் கணக்குக் காட்டாமல் சொத்துச் சேர்க்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் என அந்த நபர் சார்ந்து சோதனை நடத்துவது வழக்கம்தானே... இதனை எப்படித் தவறு என்று சொல்ல முடியும்?"
"விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு ஆண்டவன்கூட இல்லை".
"வருமானவரித் துறை ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கிறது. இந்த நிலையில், அவர்களுக்கு ஆதரவாகப் பேசுவதாலேயே தவறு நடக்கவில்லை என்று ஆகிவிடுமா?"
''சோதனைக்குள்ளானவர்கள் அனைவருமே அதற்குரிய கணக்குகளை வைத்திருக்கிறார்கள். அதனால், வருமானவரித் துறை விசாரணையில் அனைத்து உண்மைகளும் தெரிய வரும்".
''வருமானவரித் துறை சோதனை என்பது, 'கறுப்புப் பண ஒழிப்பு ஆபரேஷன்' என்று பி.ஜே.பி. தரப்பில் சொல்லப்படுகிறதே?''
"அதிகாரத்தில் இல்லாதவர்களிடம் இல்லாத கறுப்புப் பணமா... இவர்களிடத்தில் இருக்கப்போகிறது?''
''அதிகாரத்தில் இருப்பவர்கள் என்றால் யார்?''
''அனைவரையும் குறிப்பிடுகிறேன்".
''பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர்தான் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அவர்களைத்தான் நீங்கள் குறிப்பிடுகிறீர்களா?''
"வேறு யாரைக் குறிப்பிட முடியும்?"
"தமிழகத்தில் ஆளுநர் ஆய்வு செய்துள்ளாரே?''
"அத்துமீறலில் இது புதியது. ஒரு மாநில ஆளுநர் தனக்கு விதிக்கப்பட்ட பணி வரம்புகளை அத்துமீறிச் செய்திருக்கிறார். அரசாங்க நிர்வாகத்தில் மூக்கை நுழைக்கிறார். நேரடி நடவடிக்கையில் இயங்குவதன்மூலம் ஒரு மோசமான முன்னுதாரணத்தை இந்தியாவுக்குச் சொல்லியிருக்கிறார்.ஆளுநர் ஆற்றுப்படுத்துகிறவறே தவிர, அவர் இப்படிப்பட்ட நிர்வாகத்தில் இறங்குவதன்மூலம் மாநில நிர்வாகத்தை மேலாண்மை செய்ய விரும்புகிறார். அதிலும் உள்ளாட்சித் துறை அமைச்சர் உடன் இருக்கும்போது இப்படிப்பட்ட நடவடிக்கையில் இறங்கியது தமிழகத்துக்குக் கலங்கம் விளைவிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் சுயாட்சிக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது. கூட்டாட்சித் தத்துவத்துக்கு மிகப்பெரிய அபாயம் ஏற்பட்டுள்ளது. பி.ஜே.பி. இல்லாத எல்லா மாநிலங்களிலும் ஆளுநர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டுவது அழகும் அல்ல... ஆரோக்கியமும் அல்ல".
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
“கூட்டாட்சித் தத்துவத்துக்கு மிகப்பெரிய அபாயம்!” கவர்னர் விவகாரத்தில் கொதிக்கும் நாஞ்சில் சம்பத்
TAGS :
COMMENTS