[ad_1]

”அ.தி.மு.க-வை வேறு யாராலும் அழிக்கமுடியாது. அவர்களே அழித்துக்கொள்வார்கள்” என பா.ஜ.க-வின் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



சசிகலா மற்றும் தினகரனின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும், ஐந்து நாள்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் கிட்டத்தட்ட 180 இடங்களுக்கும் மேல் சோதனை தொடங்கியது. திவாகரனுக்குச் சொந்தமான நிறுவனங்கள், அங்கு பணியாற்றும் மேலாளர், ஊழியர்களின் வீடுகள் என தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என மொத்தம் 105 இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதுதவிர ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி போன்ற வெளி மாநிலங்களிலுள்ள 82 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. ஆகமொத்தம் 187 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில், பா.ஜ.க-வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “ஊழல் செய்வதற்கு பா.ஜ.க ஒருபோதும் தூண்டியதே இல்லை. ஊழல் செய்தவர்களைத் தண்டிக்கத் தவறியதும் இல்லை. தவறு செய்பவர்கள் யாரும் தப்ப முடியாது. இங்கே, அ.தி.மு.க கட்சியை யாராலும் அழிக்க முடியாது. அவர்களே அழித்துக்கொள்வார்கள்” என்றார்.