[ad_1]

ஆஷஸ் தொடர் இன்னும் இரண்டு நாள்களில் தொடங்கப் போகிறது. ஆஸ்திரேலியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையே பரஸ்பரம் வாதம், பிரதிவாதம் நடந்த வண்ணம் இருக்கின்றன. வழக்கம்போல மைதானத்துக்கு வெளியே நடக்கும் இந்த ஸ்லெட்ஜிங் யுத்தத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்களே முந்திக்கொண்டு கருத்துத் தெரிவித்து வருகின்றனர். தற்போது ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர், நாதன் லயன், `இந்த ஆஷஸ் தொடர் மூலம் பலரின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' என்று சூளுரைக்கிறார்.