[ad_1]

Chennai: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அசைவ உணவுகளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தடை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 




தமிழகத்தின் முழுநேர ஆளுநராக கடந்த அக்டோபர் 6-ம் தேதி பதவியேற்றது முதல் அதிரடி காட்டிவருகிறார் பன்வாரிலால் புரோஹித். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகக் கோவை சென்ற அவர், திடீரென மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். ஆளுநரின் இந்த ஆய்வுக் கூட்டம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு அமைச்சர் வேலுமணிக்கே அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, கோவையில் தூய்மை இந்தியா பணிகளைப் பார்வையிட்ட ஆளுநர், திருப்பூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் மரம்நடும் விழாவில் கலந்துகொண்டார். அவரின் வருகையை ஒட்டி தடபுடலான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்திருந்தனர். 


இந்தநிலையில், அடுத்த அதிரடியாக கிண்டி ராஜ்பவன் மாளிகைக்குள் முட்டை உள்பட எந்த அசைவ உணவுகளுக்கும் அனுமதி இல்லை என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தடை போட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அசைவ உணவுகளைச் சமைத்து சாப்பிட மட்டுமல்லாமல், வெளியிலிருந்து வாங்கி வந்து உண்ணவும் ஆளுநர் தடை விதித்துள்ளாராம். ஆளுநர் மாளிகை வளாகத்துக்குள் சைவ உணவை மட்டுமே சமைத்துச் சாப்பிட வேண்டும் என்றும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளாராம்.

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");