[ad_1]





அந்தமான் அருகே உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் இரண்டு நாள்களுக்குப் பின்னர் மீண்டும் மழை தொடங்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.




தமிழகத்தில், கடந்த மாதம் 26-ம் தேதி முதல் வட கிழக்குப் பருவமழை தொடங்கிப் பெய்துவருகிறது. இதில், கடந்த வாரம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்தக் கனமழை காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டது. சென்னையில் பெய்த கனமழையால், புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்தப் பகுதிகளில் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. சென்னையின் மையப் பகுதியில் வாகன ஓட்டிகள், நடைபாதைவாசிகள் எனப் பலரும் சிரமத்துக்குத் தள்ளப்பட்டனர். இந்த  நிலையில், கடந்த 14-ம் தேதியிலிருந்து மழை குறையத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்யவே இல்லை.


இந்நிலையில் அந்தமான் அருகே வருகிற 21-ம் தேதி புதிய காற்றழுத்தத் தாழு நிலை உருவாக இருப்பதால் அடுத்த இரண்டு நாள்களுக்குப் பின்னர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீண்டும் மழை தொடங்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் வருகிற 27-ம் தேதி தென் கிழக்கு வங்கக்க்டலில் மற்றொரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் சூழலால் வரும் வாரங்களில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");