[ad_1]



மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் முக்கியக் குற்றவாளி ஹபீஸ் சயீத்தை வீட்டுக்காவலில் இருந்து விடுதலை செய்திருப்பதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.


மும்பையில் கடல் மார்க்கமாக வந்த பயங்கரவாதிகள், அப்போது தாஜ் நட்சத்திர ஹோட்டல், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அதிரடியாக வெடிகுண்டு தாக்குதல்களையும், சரமாரியாக துப்பாக்கிச்சூட்டிலும் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் 290-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பின்னர் என்.எஸ்.ஜி. படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிடிபட்ட அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதிக்கு, கடந்த 2012-ம் ஆண்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே மும்பை தாக்குதல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும், இந்தியா, பாகிஸ்தான் அரசிடம் சமர்ப்பித்துள்ளது. என்றாலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து, காஷ்மீல் எல்லைப்பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், ஊடுருவல் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்திய பாதுகாப்புப் படையினரும் அவ்வப்போது பாகிஸ்தானின் ஊடுருவல் முயற்சிகளை முறியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவரும், ஜமாத்-உத்-தவா அமைப்பின் நிறுவனருமான ஹபீஸ் சயீத்தை, அந்நாட்டு அரசு வீட்டுக்காவலில் இருந்து விடுதலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு அவரை கடந்த ஜனவரி மாதம் முதல் வீட்டுக்காவலில் வைத்திருந்தது. 297 நாள்கள் வீட்டுக்காவலில் இருந்த சயீத் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை, இந்தியாவை மிகவும் ஆத்திரமூட்டியுள்ளது. 
மேலும், அமெரிக்கர்கள் உள்பட அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கக் காரணமான தாக்குதலின் பின்னணியில் உள்ள ஹபீஸ் சயீத்தை மீண்டும் கைது செய்து, விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா, பாகிஸ்தானை வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹபீஸ் சயீத்தை விடுவித்த பாகிஸ்தான் அரசின் நடவடிக்கை மிகுந்த கவலையளிக்கிறது; மீண்டும் அவரை கைதுசெய்வதை உறுதிப்படுத்துவதுடன், நீதியின் முன் நிறுத்தவேண்டும். வெளிநாட்டு தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, எண்ணற்றவர்கள் உயிரிழக்கக் காரணமானவர் அவர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹபீஸ் சயீத்தின் தலைக்கு அமெரிக்கா, கடந்த 2010-ம் ஆண்டு 10 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அறிவித்திருந்தது.

இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவுக் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதையே இது காட்டுகிறது. என்றும், பயங்கரவாதிகளை பொதுமக்கள் மத்தியில் ஒன்றாக இணைந்து செயல்படும் முயற்சியாகவே இந்த நடவடிக்கையை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. 

பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உலக நாடுகள், பாகிஸ்தானை வலியுறுத்தி வரும் நிலையில், இதுபோன்ற செயலை அந்நாடு மேற்கொண்டிருப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்தையும், பயங்கரவாதிகளையும் பாகிஸ்தான் ஊக்குவித்து வருவதாக, ஏற்கெனவே பரவலான குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், தற்போது ஹபீஸ் சயீத்தின் விடுதலை, அவற்றை உறுதிசெய்வதாக அமைந்துள்ளது.

இதனிடையே ஹபீஸ் விடுதலை செய்திருப்பதை, இந்தியாவில் சிலர் கொண்டாடினார்கள் .

இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமானால், பயங்கரவாத ஊக்குவிப்பை அந்நாடு கைவிட வேண்டும் என்று இந்திய அரசு பலமுறை வலியுறுத்தி வந்தாலும், தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. 

தற்போது, அமெரிக்காவின் கண்டிப்பான அறிவுறுத்தலால், பாகிஸ்தான் அரசுக்கு மிகப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. என்றாலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்புக்கு பாகிஸ்தான் அரசு பணியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,


ஏற்கெனவே, இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய பாகிஸ்தான் அரசின் செயல்பாடு, இரு நாடுகளுக்கும் இடையே சுமுக நிலை ஏற்படுவதற்கு மேலும் முட்டுக்கட்டையாக விளங்கும் என்பது மட்டும் உறுதி. 
 

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");