[ad_1]





ஒயிட் காலர் வேலையை நாம் தேடிக்கொண்டிருக்கையில், நாய் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு, ஒரு லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டிக்கொண்டிருக்கிறார்கள். 




கேரளாவில் தெருநாய் தொல்லை அதிகம். பெண்கள், வயதானவர்களை  தெருநாய்கள் கடித்துக் குதறிய சில சம்பவங்கள் கேரள மாநிலத்தை உறையவைத்தன. இதனால், நகராட்சி நிர்வாகங்களே நாய் பிடிக்கும் பணிக்கு ஆள்களை நியமிக்கிறது. நாய் பிடிப்பவர்களுக்கு தனி ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. யூனிஃபார்மும் உண்டு.  தினசரி பெட்ரோல் உள்ளிட்ட அலவன்ஸாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 75 கிலோ மீட்டர் தொலைவில் நாய்களைப் பிடிக்க வேண்டும். அலவன்ஸாக தனியாக மாதம் ரூ.45 ஆயிரம் கிடைக்கிறது. ஒரு நாய் பிடித்தால் ரூ. 250 சம்பளமாக வழங்கப்படும். நாள் ஒன்றுக்கு 15 நாய்களை ஒருவர் பிடிக்கிறார். அதனால், தினமும் ரூ.3,750 சம்பளமாகப் பெறுகிறார்.  நாய் பிடிப்பதன் மூலம், ஒருவர் மாதம் ரூ. 1,12,250 வருவாய் ஈட்டுகிறார்.

உடனே,' நானும் நாய் பிடிக்கப்போகிறேன் என்று கிளம்பி விடாதீர்கள்' அவ்வளவு சாதாரணமாக உங்களை வேலைக்கு எடுத்து விடமாட்டார்கள். முறையான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.  விலங்குகள் மீது பரிவு, அச்சமின்மை போன்ற குணங்கள் நாய் பிடிக்கும் பணிக்கு முக்கியத் தகுதி. கேரளாவில், நாய் பிடிக்கும் பணிக்கு முறையான பயிற்சி மையம் இல்லை..உதகையில் மட்டுமே பயிற்சி அளிக்கும் மையம் உள்ளது. இங்கு பயிற்சி பெற்ற 8 பேர், கேரளாவில் நாய் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு, லட்சக்கணக்கில் சம்பாதித்துவருகிறார்கள். இத்தகவலை மலையாள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது!


 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");