[ad_1]
தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 63-வது பிறந்தநாள், அவரின் சொந்த ஊரான யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் இன்று கொண்டாடப்பட்டுள்ளது என யாழ்ப்பாண ஊடக வட்டாரங்கள் உறுதிசெய்துள்ளன.
இலங்கையில் சிங்கள இனவாத பௌத்த பேரினவாத அரசின் ராணுவத்தாக்குதலில் தமிழீழ மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டு வந்தததன் தொடர்ச்சியாக, 2009 மே மூன்றாம் வாரத்தில் பெரும் இனப்படுகொலையும் நடத்தப்பட்டது. அப்போது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமானது, இலங்கை அரச படைகளால் ராணுவரீதியாகத் தோற்கடிக்கப்பட்டு, விடுதலை இயக்கத்தின் ஆயுதப்போராட்டம் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அதன்பிறகு வன்னிப் பகுதி எனப்படும் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய தமிழர் தாயகப் பகுதிகளை இலங்கை அரசபடைகள் தம் முற்றுகைக்குள் வைத்திருக்கின்றன. அரசு நிர்வாகத்தில் ராணுவத்தினரின் தலையீடு தொடர்ந்துவருகிறது.
ராணுவத்தின் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் ஈழத்தமிழ் மக்கள், வீரவணக்கம் செலுத்தவும் போராளிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடவும்விடாமல் தடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடிவிடக்கூடாது என்பதில் சிங்கள இனவாத இலங்கை அரச படைகள் கடும் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றன என்றும் அதையும் மீறி, பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதும் நடந்துவருகிறது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் வளாகத்தில் ஆங்காங்கே மாவீரர்க்கு வீரவணக்கம் செலுத்தியும் பிரபாகரனுக்கு வாழ்த்துக்கூறியும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழீழத்தின் வரைபட வடிவைத் தாங்கிய கேக்கைத் தயாரிக்கச் செய்திருந்த மாணவர்கள், கைலாசபதி அரங்குக்கு வெளியில் அதை வெட்டியும் இனிப்புகளை வழங்கியும் பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடினர்.
இதைத்தவிர, பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் இன்று அவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இதையொட்டி அவ்வூரில் உள்ள வன்னிச்சியம்மன் கோயிலின் அருகில் இரு பனை மரங்களுக்கு இடையில், புலிச்சின்னம் பொறித்த கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
சொந்த ஊரில் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்!
TAGS :
COMMENTS