[ad_1]
Chennai: ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக், மருத்துவர் சிவக்குமார், ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆகிய மூவரையும் ஒரே இடத்தில்வைத்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
ஜெயா டி.வி, ஜாஸ் சினிமா உள்ளிட்ட சசிகலாவுக்குத் தொடர்புடைய 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஐந்து நாள்களாக நீடித்த இந்தச் சோதனை மதியம் 3 மணியளவில் நிறைவடைந்தது. சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெயா டிவி-யின் சி.இ.ஓ-வும் சசிகலாவின் அண்ணன் ஜெயராமன்-இளவரசி தம்பதியின் மகன் விவேக்கை, அவரது மகாபலிபுரம் இல்லத்திலிருந்து வருமான வரித்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது, விவேக்வுடன் சேர்த்து, மருத்துவர் சிவக்குமார், ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆகிய மூன்று பேரையும் நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
விவேக், மருத்துவர் சிவக்குமார், ஜெ. உதவியாளர் பூங்குன்றன் ஆகிய மூவரிடமும் ஒரே இடத்தில் விசாரணை..!
TAGS :
COMMENTS