[ad_1]





'காங்கிரஸ்  அல்லாத இந்தியா உருவாக, ராகுல் காந்தி  காங்கிரஸ் கட்சியின் தலைவராவது அவசியம்' என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.




 


குஜராத் தேர்தலை முன்னிட்டு பிரசாரம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, ஏராளமான கோயில்களுக்குச் சென்றுவருகிறார். இதைக் கிண்டலடிக்கும் வகையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் பேசும்போது, “ராகுல் காந்திக்கு கோயிலில் எப்படி அமர வேண்டும் என்பது கூடத் தெரியாது. ஒரு முறை அவர், காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வந்தார். அப்போது, கோயிலின் உள்ளே நமாஸ் செய்வதுபோல அமர்ந்திருந்தார். இதைக் கவனித்த பூசாரி, 'இது மசூதி அல்ல; கோயில்' என்று ராகுலைக் கடிந்துகொண்டார்.  அவர் இப்போது கோயில்களுக்குச் சென்றுவருவது வேடிக்கையாக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ராமரும் கிருஷ்ணரும் கற்பனை கதாபாத்திரங்கள் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இவர்கள் கற்பனை என்றால், ராகுலுக்கு கோயிலில் என்ன வேலை. அவர், கோயில்களுக்குச் செல்வது எனக்கு வருத்தமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது” என்றார்.ராகுல் காங்கிரஸ் தலைவராவது பற்றிய கேள்விக்குப் பதில் அளித்த யோகி, “ காந்தி, சுதந்திரத்திற்குப் பின் காங்கிரஸை கலைக்கச் சொன்னார் . காங்கிரஸ்  அதை நிறைவேற்றிவருகிறது. காங்கிரஸ்  அல்லாத இந்தியா உருவாக, ராகுல்காந்தி அக்கட்சியின் தலைவர் ஆவது அவசியம்” என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");