[ad_1]

கேரளாவில் புதிய ரக கார்களை பதிவு செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் கார்களை பதிவு செய்ய மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பல பிரபலங்கள், சினிமா நடிகர்கள், நடிகைகள் தங்களது கார்களை புதுச்சேரியில் பதிவு செய்து வருகின்றனர். அங்கு பதிவு செய்த பின் தங்களது சொந்த மாநிலங்களுக்கு கொண்டு சென்று பயன்படுத்துகின்றனர்.





இதன் மூலம் அந்த மாநில போக்குவரத்துத் துறைக்கு வருவாய் இழப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. நடிகை அமலாபால் புதுச்சேரியில் கார் பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. அதன்பின் நடிகர் ஃபகத் ஃபாசில் உட்பட பலரும் புதுச்சேரியில் தங்களது கார்களை பதிவு செய்தது தெரியவந்தது. இந்நிலையில், பிரபல நடிகரும் பா.ஜ.க. கட்சியின் எம்.பி.,யுமான சுரேஷ் கோபியும் கார் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக திருவனந்தபுரம் போக்குவரத்து அதிகாரிகள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் . அதில் வருகிற 13-ம் தேதிக்குள் அவரது  கார் தொடர்பான அனைத்து ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.