[ad_1]
கரூர் மாவட்டத்தை டெங்கு பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தினமும் அதிகாலையில் மாவட்டம் முழுக்க ஒவ்வொரு பகுதியாக போய் டெங்கு தடுப்பு பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளாமல் டெங்கு கொசுக்கள் வளர்வதற்கு வழிவகை செய்யும் நபர்களுக்கு ஸ்பாட்டிலேயே ஃபைன் போட்டு அலற விடுகிறார். இந்நிலையில், இந்த டெங்கு தடுப்புப் பணிகளை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சித்தலைவருக்கு போட்டியாக கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷூம் அதிரடியாக மாவட்டம் முழுக்க விசிட் அடித்து, டெங்கு தடுப்புப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.
ஒரு மாத காலமாகவே குளித்தலை, தோகைமலை, அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு விசிட் அடித்து சூர்யபிரகாஷ் டெங்கு தடுப்புப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். டெங்கு கொசு வளர்வதற்கு வழிவகை செய்த நபர்களுக்கு ஸ்பாட்டிலேயே ஃபைன் போடுவதோடு, அவர்களிடம் அறு மணி நேரம் டெங்குவின் கொடூரம் பற்றி லெக்சர் கொடுக்கும் அவர், 'இனிமேல் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்' என்று அன்பாக பேசி, அவர்களுக்கு டெங்கு குறித்தும், சுற்றுப்புற தூய்மை குறித்த விழிப்பு உணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். அப்படி கரூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டு பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் டெங்கு தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள பள்ளி, தனியார் நிறுவனங்கள், வீடுகள், கடைகள் என்று பல்வேறு இடங்களுக்கு அதிகாரிகள் சகிதம் சென்ற அவர், ஒவ்வொருவரிடம் பத்து நிமிடம் நின்று டெங்கு குறித்த தீமைகளை தெளிவாக விளக்கி கூறினார்.
நம்மிடம் பேசிய அவர், "படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று எல்லோரும் தங்கள் வீட்டில் ஒருவருக்கு டெங்கு பாதிக்கும் வரை டெங்கு குறித்த அச்சம் இல்லாமல் சாதாரணமாக இருக்கிறார்கள். அவர்களிடம் பொறுமையாக டெங்கு பற்றி எடுத்துச் சொல்லி, அதற்கான தடுப்பு நடவடிக்கைகளையும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதன் அவசியம் பற்றியும் எடுத்துக் கூறுகிறோம். பலர் ஆர்வமா கேட்கிறாங்க. சிலர் வேண்டா வெறுப்பா கேட்கிறாங்க. இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை இத்தோடு நிறுத்தாமல், சுற்றுப்புறத்தை கரூர் மக்கள் தாமாக முன்வந்து தூய்மையாக வைத்துக்கொள்ள முனையும் வரை எங்களது பிரசாரம் தொடரும். கரூர் மாவட்டத்தை விரைவில் தூய்மையான மாவட்டமாக நீங்கள் பார்க்கலாம்" என்றார் நம்பிக்கையாக!
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
கலெக்டருக்கு போட்டியாக டி.ஆர்.ஓவும் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு!
TAGS :
COMMENTS