[ad_1]
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழையால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் வெள்ள பாதிப்பு அடைந்த பகுதிகளை அமைச்சர்களும், அதிகாரிகளும் ஆய்வு செய்துவருகின்றனர். தாம்பரம் அடுத்துள்ள சிட்லபாக்கம் பகுதியில் ஒவ்வொரு மழையின் போதும் 8-ம் வார்டிலிருந்து 12-ம் வார்டு வரை பாதிப்படையும். சுமார் 5000 வீடுகள் இப்பகுதியில் இருக்கின்றன. லேசான மழைக்கே தண்ணீர் தேங்கிவிடும். இந்த நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அப்பகுதிகளில் ஆய்வு செய்தார்.
சிட்லபாக்கம் பகுதியில் ஆய்வு செய்ய வந்த முதல்வர் பழனிசாமி, தண்ணீர் தேக்கமடைந்த இடத்தைப் பார்வையிட்டு “ஏன் இப்பகுதியில் அதிகம் தண்ணீர் தேங்குகிறது?” என கேள்வியெழுப்பினார். “சிட்லபாக்கம், சேலையூர் ஏரிகளில் இருந்து தண்ணீர் வருவதால்தான் இப்பகுதியில் தண்ணீர் தேங்குகிறது. முன்பு விவசாய நிலங்களாக இருந்த இப்பகுதி, தற்போது குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டது. விவசாய நிலம் என்பதால் நீர்வரத்து கால்வாய்கள் இருந்தன. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் நீர் வெளியேற முடியவில்லை. இதற்காக புதிய திட்டங்களை போட்டிருக்கிறோம்.” என்றார்கள்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் முதல்வர் நேரில் ஆய்வு
TAGS :
COMMENTS