[ad_1]

மெர்சல் படத்திலிருந்து எந்தக் காட்சிகளும் வசனங்களும் நீக்கப்படவில்லை என்று தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.





விஜய் நடித்து தீபாவளி அன்று வெளியான ’மெர்சல்’ திரைப்படத்தில், ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் , மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்தக் காட்சிகள் உண்மைக்கு புறம்பாக உள்ளது. அதனை படத்திலிருந்து நீக்கவேண்டும் என்று தெரிவித்துவருகின்றர். இந்த விவகாரம் இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.



ராகுல்காந்தி, கபில்சிபல் உள்ளிட்ட தேசியத் தலைவர்களும், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழகத் தலைவர்களும் மெர்சல் படத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். இந்தநிலையில், மெர்சல் படத்திலுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை தேவைப்பட்டால், நீக்குவதாக தயாரிப்பு நிர்வாகம் விளக்கமளித்திருந்தது. தற்போது, படத்தயாரிப்பு நிறுவனமான தேனான்டாள் பிலிம்ஸின் நிர்வாக இயக்குநர், 'மெர்சல் படத்திலிருந்து எந்தக் காட்சிகளும் நீக்கப்படவில்லை. வசனங்களும் நீக்கப்படவில்லை. எங்களுக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி. அரசுக்கும் பா.ஜ.க நண்பர்களுக்கும் நன்றி. தேவைப்பட்டால் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கத் தயாராக இருக்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.