[ad_1]

Melur: 

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள ஒரு போக பாசன விவசாயத்துக்கு  தங்களுக்கு வழங்கவேண்டிய தண்ணீரை, புதிய விரிவாக்க கால்வாய்களுக்கு வழங்கிப் பாகுபாடு காட்டுவதாக  அரசு அதிகாரிகளையும் தமிழக அரசையும் கண்டித்து, இன்று மேலூரில் பல்வேறு இடங்களில் 3000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நான்கு வழிச்சாலையில் கடுமையான போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலூர் பகுதியைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராமத்து விவசாயிகள் இப்போராட்டதில் பங்கேற்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய விவசாயிகளின் போராட்டம், தொடர்ந்து  நடந்துவருகிறது. மேலும், மேலூர் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும் விதமான பெரியாறு அணைத் தண்ணீரைத் திறந்துவிடாததைக் கண்டித்து, மேலூர் வணிகர் சங்கத்தினரின் ஆதரவில் கடையடைப்புப் போராட்டம் நடத்தி, எதிர்ப்பைத் தெரிவித்தனர். 


 




இது தொடர்பாக மேலூர் விவசாய சங்கத் தலைவர் முருகன் கூறுகையில், "இது எங்கள் வாழ்வாதாரப் பிரச்னை. இந்த உரிமையை விட்டுக்கொடுத்தால், எங்கள் பகுதியில் உள்ள 2 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படும். மேலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பஞ்சம் ஏற்பட்டுவிடும். எனவே, எங்களுக்கு வழங்கவேண்டிய தண்ணீரை முறையாக அரசு வழங்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெறும்'' என்று தெரிவித்தார் .

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");