[ad_1]
ஆண்ட பரம்பரை இளவசர்களில் சார்லஸ் முதல் ஜார்ஜ் வரை பெயர்களை டான் டான் என்று சொல்லிவிடுவோம். ஒவ்வொரு விஷயத்துக்கும் நம் நாட்டையே நம்பி இருக்கும் நாட்டைச் சேர்ந்த குட்டி இளவரசர் டெல்லி வந்துள்ளார். அண்டை நாடான பூடானுக்கும் நமக்கும் நெருங்கிய உறவு உண்டு. பொருளாதாரத்தில் இருந்து ராணுவ உதவி வரை, அத்தனை விஷயங்களுக்கும் இந்தியாவை நம்பி இருக்கும் நாடு பூடான். சமீபத்தில், பூடானின் டோக்லாம் பகுதியை சீனா ஆக்கிரமிக்க முயன்ற போது, இந்தியாவும் ராணுவத்தை அங்கே நிறுத்துவதற்கு இந்த உறவுதான் காரணம்.
பூடான் மன்னர் ஜிக்மே கேஷர் நம்கேல் வாங்சுக் மற்றும் அவரது மனைவி கியால்ட்ஸ்யூன் ஜெட்சன் பேமா வாங்சுக் ஆகியோர், நான்கு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளனர். அரச தம்பதியினர், இளவரசர் ஜிக்மே நாம்கெல் வாங்சுக்கையும் அழைத்து வந்துள்ளனர். டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை அரச தம்பதியர் சந்தித்தனர். அப்போது, குட்டி இளவரசருக்கு பிரதமர் மோடி வணக்கம் தெரிவித்தார். பிஞ்சு விரல்களால் அவரும் பதிலுக்கு பிரதமருக்கு வணக்கம் தெரிவித்தார். பூடான் இளவரசருக்கு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பயன்படுத்தப்பட்ட கால்பந்து ஒன்றை பிரதமர் மோடி பரிசளித்தார்.
பிரதமருடன் அரச தம்பதி உரையாடிக் கொண்டிருக்கையில், அங்குமிங்கும் ஓடி சேஷ்டை செய்து கொண்டிருந்த இளவரசரை அவரின் தாயார் ஜெட்சன் அவ்வப்போது கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார். பூடானின் பாரம்பரிய உடை அணிந்தவாறு வலம் வரும் பூடானின் குட்டி இளவரசர் தலைநகர மீடியாக்களையும் கவர்ந்துள்ளார்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
ஆண்ட பரம்பரை இளவரசர்கள் தெரியும்... அண்டை நாட்டு இளவரசரைத் தெரியுமா?
TAGS :
COMMENTS