[ad_1]





Nagapattinam: நாகப்பட்டினத்தில், நாட்டுவெடிகள் தயாரிக்கும் கட்டடத்தில் இன்று காலை திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் நாகம்மாள் என்ற பெண்மணி பரிதாபமாய் உடல்கருகி இறந்துபோனார்.  




நாகை வடகுடி ரோட்டில், வடகுடிசத்திரம் என்ற இடத்தில் `பி.ஆர்.பி. ஃபயர் ஒர்க்ஸ்' என்ற வானவெடி தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வந்தது. இதன் உரிமையாளர் நாகை வானக்கார வீதியில் வசிக்கும் வீரப்பன் மனைவி சௌந்திரவள்ளி ஆவார். இந்த வெடி தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்கெனவே இரண்டுமுறை விபத்து நேர்ந்திருக்கிறது. உயிரிழப்பு இல்லை என்பதால், அதில் யாரும் கவனம் செலுத்தவில்லை.  



நாகையை அடுத்த நரியங்குடி கிராமத்தைச் சேர்ந்த முருகையன் என்பவர், இரவுக் காப்பாளராக இந்த வெடி நிறுவனத்தில் பணிபுரிந்திருக்கிறார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவர் மனைவி நாகம்மாள் இரவுக் காப்பாளராகப் பணிக்கு வந்திருக்கிறார். இன்று அதிகாலை திடீரென வெடிமருந்து தயாரிக்கும் நிறுவனத்திலிருந்து பலத்த சப்தம், அருகில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடிச்சென்று பார்த்தபோது, அங்கு நாகம்மாள் உடல் கருகி இறந்து கிடந்தார். நாகூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விபத்துக்கான காரணத்தை விசாரணை செய்துவருகின்றனர். கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  



கடந்த 50 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்த வெடி நிறுவனத்தில் இரண்டுமுறை விபத்து ஏற்பட்டும், அதை ஆய்வுசெய்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், நாகம்மாள் உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியும் என்றும், இந்த விபத்து பணி நேரத்தில் நடந்திருந்தால் ஊழியர்கள் பலரின் உயிரைப் பறித்திருக்கும் என்றும் அச்சம் தெரிவிக்கிறார்கள் கிராமவாசிகள். 



 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");