[ad_1]





'முட்டை விலை உயர்வுக்கு அரசுதான் காரணம்' என தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் கூறினார்.




தமிழகத்தில், முட்டையின் தேவையைப் பூர்த்திசெய்யும் மண்டலமாக நாமக்கல் உள்ளது. இங்குதான் அதிக அளவில் முட்டை உற்பத்தியாகின்றன. உபரி முட்டைகள் கேரளா, உத்தரப்பிரதேசம், டெல்லி போன்ற பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இங்கு, சுமார் 1,000-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. பண்ணைகளில் 4.25 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சராசரியாக 3.25 கோடி முட்டைகள் பெறப்படுகின்றன. 

நாடுமுழுவதும் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், முட்டை விலை உயர்ந்துவருகிறது. வழக்கமாக, ரூ.3.50 என்ற விலையில் நாமக்கலில் இருந்து முட்டை கொள்முதல் செய்யப்படும். ஆனால் தேவை அதிகரித்ததால், கடந்த சில தினங்களாக முட்டை விலை அதிகரித்துவந்தது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 42 காசுகள் உயர்ந்து, ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ.5.16 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. சென்னையில் இன்று, ஒரு முட்டை 5 ரூபாய் 65 காசுகளாக உள்ளது. தேவை அதிகரித்துவருவதால், விலை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளது என கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். முட்டை விலை உயர்வு பொதுமக்களுக்கு சுமையாக மாறி உள்ளது. 

இந்நிலையில், முட்டை விலை உயர்வுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் கூறுகையில், “முட்டை விலை உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகளின் கவனக்குறைவே காரணம். அரசு நினைத்தால், இந்த விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தலாம். இதற்காக அரசு வெகு காலம் எடுத்துக்கொள்ளாமல், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");