[ad_1]
சவுதி இளவரசர் மன்சூர் பின் மோக்ரன், ஏமன் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
மன்சூர் பின் மோக்ரன், அசிர் மாநில ஆளுநராகப் பொறுப்பு வகித்துவந்தார். ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகளுடன் இவர் சென்ற ஹெலிகாப்டர், சவுதி அரேபியா-ஏமன் எல்லையில் விபத்தில் சிக்கியது. அதில், மன்சூர் பின் மோக்ரன் மற்றும் ஹெலிகாப்டரில் இருந்த அதிகாரிகள் உயிரிழந்தனர்.
மன்சூர் பின் மோக்ரன் உயிரிழந்த செய்தியை அல்-எக்பரியா செய்தித் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ஆனால், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை. ஊழல் ஒழிப்பு நடவடிக்கையாக 11 இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் தொழில் அதிபர்களை சவுதி அரேபிய அரசு கைதுசெய்துள்ள நிலையில், இளவரசர் மன்சூர் பின் மோக்ரனின் மரணம் நிகழ்ந்துள்ளது.
ஹெலிகாப்டர் விபத்தில் சவுதி இளவரசர் பலி!
TAGS :
COMMENTS