[ad_1]
Puducheri: 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசில், ஆளுநர் தலையிடும் நோய் தமிழகத்துக்கும் பரவியுள்ளது' என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இரண்டு நாள் பயணமாக கோயம்புத்தூர் சென்றுள்ளார். அங்கு, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். ஆளுநரின் இந்தச் செயல், தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், ஆளுநரின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்துப் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, 'ஆளுநர்கள் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பார்ப்பது தவறு அல்ல.
ஆனால், தன்னிச்சையாக முடிவு எடுப்பது தவறு. மாநில அரசைக் கட்டுப்படுத்த ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநரை மத்திய அரசு பயன்படுத்துகிறது. 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடும் நோய் தமிழகத்துக்கும் பரவியுள்ளது' என்று விமர்சனம் செய்துள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஆளுநர் தலையிடும் நோய் தமிழகத்துக்கும் பரவியுள்ளது..! நாராயணசாமி விமர்சனம்
TAGS :
COMMENTS