[ad_1]
Chennai:
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்துப் பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார்.
சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் இன்று நடந்த தினத்தந்தி பவளவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப்பேசினார். இதைத் தொடர்ந்து சென்னை கோபாலபுரத்துக்கு பிரதமர் மோடி புறப்பட்டார். அவருடன் ஆளுநர் பன்வாரிலார் புரோஹித்தும் வந்தார். பிரதமரின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.
நண்பகல் 12.10 மணிக்கு கோபாலபுரம் வந்தடைந்த பிரதமர் மோடியைத் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். எம்.பி கனிமொழி பிரதமருக்கு சால்வை கொடுத்து வரவேற்றார். அப்போது, தி.மு.க முதன்மை நிலைச் செயலாளர் துரைமுருகன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உடனிருந்தனர். பின்னர், பிரதமரைக் கருணாநிதியிடம் மு.க.ஸ்டாலின் அழைத்துச் சென்றார். அப்போது, கருணாநிதியின் கையைப் பிடித்துக்கொண்டு பிரதமர் நலம் விசாரித்தார். அப்போது, முரசொலி பவளவிழா மலரை பரிசாகப் பிரதமர் மோடிக்கு கருணாநிதி வழங்கினார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கருணாநிதியிடம் நலம் விசாரித்தார். 15 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடந்த பின்னர் பிரதமர் மோடியை மு.க.ஸ்டாலின் வழியனுப்பிவைத்தார். அப்போது, காரில் ஏறிய பிரதமர் மோடி அங்கிருந்தவர்களைப் பார்த்து கைகாட்டினார். பின்னர் அங்கிருந்து பிரதமர் புறப்பட்டுச் சென்றார்.
தி.மு.க தலைவர் கருணாநிதியைப் பிதரமர் மோடி திடீரெனச் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
சந்திப்பின்போது பிரதமர் மோடிக்கு கருணாநிதி கொடுத்த பரிசு!
TAGS :
COMMENTS