[ad_1]
சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கி கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் சரிதா நாயர். இவர் மீது 44 வழக்குகள் தொடரப்பட்டிருந்தது. அதில் 22 வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணையில் உள்ளன. இந்த சோலார் பேனல் மோசடி வழக்கில் கேரளாவில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த நிர்வாகிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தற்போது சரிதாநாயர் கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகேயுள்ள கொல்லம் விளை, கொல்லங்குடிமூக்கு ஆகிய இரண்டு இடங்களில் பேப்பர் தம்ளர், தட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்கியுள்ளார். இவை சரிதா நாயர் தொழிற்சாலைகள் என வெளியில் தெரியாமல் மிகவும் ரகசியமாக இயங்கி வந்தது. ஆனால், இப்போது அவருடைய தொழிற்சாலைதான் என்பது தெரிந்துள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து வருகின்றனர். தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் சரிதா நாயர் ஏன் தொழிற்சாலை தொடங்கினார் என தெரிவித்துள்ளார். `நான் நல்ல வாழ்க்கை வாழ விரும்புகிறேன். சோலார் பவர் திட்டத்தை விடப்போவதில்லை. ஆனால் அதனை தற்போது வெளிமாநிலங்களுக்கு டிசைனிங் தொழிலாக செய்து வருகிறேன். மக்களை ஏமாற்றிய ஒருவர் மோசடி செய்துவிட்டார் என்பதற்காக அவர் அதையே திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்பார் என மக்கள் நினைக்கின்றனர். சோலார் பேனல் மோசடி வழக்கு 90 சதவிகிதம் அரசியல் போட்டியின் காரணமாக தொடரப்பட்டது. அதன் விசாரணை அறிக்கை கேரள மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அதில் குற்றவாளிகள் என சொல்லப்பட்டவர்கள் இடமிருந்து என் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை வெளியானால் கேரளாவின் பல அரசியல் பிரமுகர்களின் அரசியல் பயணம் முற்றுப்பெரும். சோலார் பேனல் வழக்கில் நான் குற்றவாளி என தீர்ப்பு வந்தால் அதனை எதிர்த்து முறையீடு செய்வேன். அந்த வழக்கு 90 சதவிகிதம் அரசியல் காரணமாகவும் 5 சதவீதம் தொழில் பங்குதாரர்களிடம் இருந்தும் 5 சதவீதம் எனது தவறு காரணமாகவும் ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் எனக்கு மிகுந்த பாதுகாப்பு கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு தொழிற்கூடங்களை தொடங்கி இருக்கிறேன் இதன் மூலம் ஓரளவு வருமானம் கிடைக்கிறது' என்று அவர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழில் தொடங்கினார் சரிதா நாயர்!
TAGS :
COMMENTS