[ad_1]





குஜராத் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், குஜராத்தில் உள்ள சிவன் கோயில்களுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி சென்று தரிசனம் செய்துவருகிறார்.




குஜராத் காந்தி நகரில் உள்ள அக்ஷர்தாம் கோயில், துரகதீஷ் கோயில், அம்பாஜி கோயில், கோடிலியா பகுதியில் உள்ள சாமுண்டா கோயில்களுக்கு, கடந்த வாரத்தில் ராகுல்காந்தி சாமி தரிசனம் செய்திருக்கிறார். நேற்று, பதன் பகுதியில் உள்ள மெக்மயா கோயில், வாரனாவில் உள்ள கோடியார் மா கோயில்களுக்கும் ராகுல் சென்றிருக்கிறார். 

குஜராத் மாநிலத்தின் சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம் நடக்க உள்ளது. இந்நிலையில் ராகுல்காந்தி, குஜராத்தில் உள்ள முக்கிய கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவருவது, இந்துக்களின் ஓட்டுகளைக் கவரவே என்று பா.ஜ.க., குற்றம் சாட்டியது.

இதுகுறித்து குஜராத்  மாநில பா.ஜ.க., பொறுப்பாளர் பூபேந்தர் கூறிகையில், '' கோயில்களுக்குச் செல்வதை நாங்கள் எதிர்க்கவில்லை. அனைவரும் கோயிலுக்குச் செல்ல வேண்டும். நமது பாரம்பர்யத்தைத் தொடர வேண்டும் என விரும்புகிறோம். ஆனால், ராகுல் காந்தியிடம் நான் கேட்கவேண்டியது ஒன்றுதான். டில்லியில் தங்கியிருக்கும் அவர், அங்கு எத்தனை கோயில்களுக்குச் சென்றார்... டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயிலுக்குச் சென்றாரா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



இதற்கு ராகுல் காந்தியோ, ''நான் கடவுள் சிவனின் பக்தன். அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். எனக்கான உண்மை என்னிடம் உள்ளது'' என்று பா.ஜ.க-வுக்கு பதிலடிகொடுத்துள்ளார்.

 

 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");