[ad_1]





Coimbatore: கோவை சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வளாகக் கட்டடத்தில் கம்பிக்குள் சிக்கித் தவித்த பூனையைத் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.




 

கோவை, வைரட்டி ஹால் சாலையில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி உள்ளது. அந்த வங்கி வளாகத்தில், கட்டட கட்டுமானக் கம்பியில் ஒரு பூனை ஒன்று ஏறியது. ஆனால், அந்தப் பூனையால் திரும்பி இறங்க முடியவில்லை. இதையடுத்து, சிக்கித் தவித்த அந்தப் பூனையைப் பார்த்து பரிதாபப்பட்ட வங்கி ஊழியர்கள், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

 

 



 


இதையடுத்து, கோவை தெற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் ஜெயச்சந்திரன், ராஜி, மருதமுத்து, பழனிச்சாமி, சிவக்குமார், காசிமாயன், செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு, ஒரு தீயணைப்பு வண்டியில் வந்தனர்.ஏணியை வைத்தும், கீழே வலை விரித்தும் பூனையை மீட்க அவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அது பலனிக்கவில்லை. இதனால், பூனை அருகிலேயே ஒரு பலகையை வைத்து, பூனையை முடுக்கிவிட்டனர். 20 நிமிடத்துக்குப் பிறகு பூனை அந்தப் பலகை மூலம், கீழே இறங்கியது. பூனையைப் பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறைக்கு, வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில், தீயணைப்புத் துறையினரால், கடந்த இரண்டு மாதங்களில் மீட்கப்பட்ட இரண்டாவது பூனை இது. ஏற்கெனவே கடந்த மாதம் 6-ம் தேதி, கோவை தலைமை தபால் நிலையத்தில் சிக்கிய பூனையைத் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");