[ad_1]





புதுச்சேரி ஆரோவில்லில் உள்ள தினகரனின் பண்ணை வீட்டில் இரண்டாம் நாளாக இன்றும் வருமான வரிச்சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.




சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் நேற்று அதிகாலை 4 மணியிலிருந்து இரண்டாம் நாளான இன்றும் வருமான வரித்துறையினர் சோதனைநடத்தி வருகின்றனர். சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் எனக் கிட்டத்தட்ட 180 இடங்களுக்கும் மேல் நேற்று சோதனை நடந்தது. திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள், அங்கு பணியாற்றும் மேலாளர், ஊழியர்களின் வீடுகள் எனத் தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என மொத்தம் 105  இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இது தவிர ஹைதராபாத், பெங்களூர், டெல்லி என 82 இடங்களில் இந்தச் சோதனை நடைபெறுகிறது. மொத்தம் 187 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் ஜெயா டிவி அலுவலகத்தில் விடிய விடிய வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி தற்போது காலையிலும் சோதனையை தொடர்ந்து வருகின்றனர். மேலும் ஜெயா டிவி சிஇஓ விவேக், அவரது சகோதரி கிருஷ்ணப்ரியா இல்லங்களிலும் விடிய விடிய சோதனை நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் லட்சுமி ஜுவல்லர்ஸ் கடையில், டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் வழக்கறிஞர் பாலுச்சாமி வீட்டில், மன்னார்குடியில் திவாகரனின் வீடு, கல்லூரியில், கூடலூர் கோடநாடு பங்களாவில் மரவேலை பார்த்து வந்த சஜீவனுக்கு சொந்தமான இடங்களில், சென்னை அண்ணா நகரில் இளவரசியின் மகன் விவேக் மாமனார் பாஸ்கர் வீட்டில், வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ் தியேட்டரில், புதுச்சேரி ஆரோவில்லில் உள்ள டிடிவி தினகரனின் பண்ணை வீட்டில், சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் வீட்டில், திருப்பாதிரிபுலியூரில் டிடிவி தினகரனின் ஜோதிடர் சந்திரசேகரன் வீட்டில், கோடநாடு எஸ்டேட்டில், பிலோமினாநகரில் உள்ள டாக்டர் வெங்கடேஷின் நண்பர் ராஜேஷ்வரன் வீட்டிலும் வருமானவரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வருமான வரித்துரை அதிகாரிகள் அவர்கள் சோதனையிடும் இடங்களிலேயே தங்கி ஓய்வெடுத்தப் பின்னர் மீண்டும் தற்போது இரண்டாம் நாளாகத் தங்கள் சோதனையை நடத்தி வருகின்றனர்.


 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்