[ad_1]

நகர வாழ்க்கையிலிருந்தும் தேவையில்லாத குற்றச்சாட்டுகளிலிருந்தும் வெளிவர விரும்புகிறேன் என்று அமலாபால் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.




தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் நடித்துவரும் பிரபல நடிகை அமலாபால், சொகுசு கார் ஒன்றை புதுச்சேரியில் போலி முகவரி காட்டி பதிவு செய்து 20 லட்ச ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்ததாகச் செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, அமலாபால், கார் வாங்கியதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜஹான் தெரிவித்தார்.



இந்த நிலையில், நடிகை அமலாபால் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாய் ஒன்றுடன் படகு சவாரி செய்வது போன்ற படத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், 'இந்த நேரத்தில் நகர வாழ்க்கையிலிருந்தும் தேவையில்லாத ஊகங்களிலிருந்தும் வெளிவர விரும்புகிறேன். நான் இப்போது படகு சவாரியைத் தேர்ந்தெடுத்துள்ளேன். நான் சட்டத்தை மீறிவிட்டேன் என்று குற்றச்சாட்டுகள் வராது என்று நினைக்கிறேன். இல்லையென்றால் நான், எனது நலம் விரும்பிகளிடம் இதுகுறித்து உறுதி செய்ய வேண்டுமா?' என்று பதிவிட்டுள்ளார். மேலும் நோரிஜிஸ்ட்ரேஷன் என்று ஹேஷ்டெக்கும் பதிவிட்டுள்ளார்.