[ad_1]
பண மதிப்பு நீக்கத்தால் நாட்டு மக்கள் சந்தித்த துயரங்களை விவரிக்கும் வகையில் நடிகர் சிம்பு பாடியுள்ள டீமானிட்டைசேஷன் அன்தம் வெளியாகியுள்ளது. அந்தப் பாடல் இப்போது வைரலாகியுள்ளது.
கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை என்று கூறி புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியாகி நேற்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்தது. அதனைமுன்னிட்டு, நவம்பர் 8-ம் தேதியை எதிர்கட்சிகள் நாடு முழுவதும் கறுப்பு தினமாக அனுசரித்தனர். இந்தநிலையில், 'தட்றோம், தூக்றோம்' என்ற டிமானிட்டேசன் அன்தம் வெளியாகியுள்ளது. அந்தப் பாடலை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார்.
அந்தப் பாடலுக்கு பாலமுரளி பாலு என்பவர் இசையமைத்துள்ளார். நடிகர் சிம்பு இந்தப் பாடலை பாடியுள்ளார். பண மதிப்பு நீக்கத்தால் நாட்டு மக்கள் சந்தித்த பிரச்னைகளை நகைப்புடன் விவரிக்கும் வகையில் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
'டிமானிட்டேசன், மாறுமா நம்ம நேஷன்.. கேள்வி கேட்டா போலிஸ் ஸ்டேசன்...' பண மதிப்பு நீக்கத்தை தெறிக்கவிட்ட சிம்பு பாடல்
TAGS :
COMMENTS