[ad_1]





மதுரை தனக்கன்குளத்தைச் சேர்ந்த நாசர் என்பவரின் மகன், ஆசிர்பாரதி. இவர், மதுரை பைபாஸ் ரோட்டில் அமைந்திருக்கும் அரபிந்தோ மீரா மெட்ரிக் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்துள்ளார். இவர், கடந்த 13-ம் தேதி, பள்ளியின் மூன்றாவது தளத்திலிருந்து தற்கொலை செய்யக் குதித்துள்ளார். இதில் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு மோசமான நிலையில், மதுரை அப்போலோ மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். பள்ளி நிர்வாகத்தால் மறைக்கப்பட்ட இச்சம்பவம், தற்போது வெளியில் வந்துள்ளது.





ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினரின் தொடர்ச்சியான டார்ச்சரால் மன உளைச்சல் ஏற்பட்டு, ஆசிர்பாரதி தற்கொலைக்கு முயன்றதாகச் சொல்லப்படுகிறது. இதுசம்பந்தமாக மாணவனின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டதற்கு, மிகவும் அலட்சியமாகப் பேசியுள்ளனர். அதைத் தொடர்ந்து எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில், 'தன் மகனை தற்கொலைக்குத் தூண்டிய பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். ஆனால், காவல்துறை இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்டுள்ள பள்ளி, அரசியல் செல்வாக்குள்ளவர்களால் நடத்தப்படுவதால், நடவடிக்கை எடுக்க காவல்துறை, கல்வித்துறை அதிகாரிகள் தயங்குகிறார்களாம். இது சம்பந்தமாக ஏழைக்கு நீதி என்ற அமைப்பின் நிர்வாகி ராமசுப்ரமணியன், ''ஆசிரியர்கள் டார்ச்சரால்தான் தற்கொலைக்கு முயற்சித்துள்ளேன் என்று மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்போது அந்த மாணவன் தெரிவித்துள்ளான். இது தனிப்பட்ட ஒரு மாணவனின் பிரச்னை என்று ஒதுக்கிவிடமுடியாது.


அந்தப் பள்ளியின் கண்டிப்பான படிப்பு முறைகளால் பாதிக்கப்பட்டு, இந்த முடிவுக்கு வந்துள்ளான். இது பற்றிய புகாருக்கு காவல்துறையினர் சி.எஸ்.ஆர்.மட்டும் போட்டு கொடுத்துள்ளார்கள். கலெக்டர், போலீஸ் கமிஷனர், மெட்ரிக் கல்வி அதிகாரி அனைவருக்கும் புகார் கொடுத்துள்ளோம். நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்'' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");